குறிப்பாக இன்று பலரும் பொருளாதார நெருக்கடியை தீர்த்து கொள்வதற்காக பலர் வெளிநாடு செல்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காகவும் தன்  மனைவி  என உழைத்துக்கொண்டே  தனது வாழ்க்கையை களிக்கின்றார்கள் . ஆனால் அவர்களது மனைவி மார்கள் இங்கு இங்கு ஜாலியாக அவர்களது சம்பளத்தில் வேறு  ஒருவனுடன் உல்லாசமாக செல்வதை கானக்கூடியதாக இருக்கிறது .
இதற்காக ஒரு நண்பரின் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்து கொண்ட சுவார்சயமான  சம்பவம் குறிப்பிடத்தக்கது  பின்வருவன அவையே

தொலைபேசியை ஒன் செய்து ‘ஓமப்பா..வந்துட்டுது. 25 ஆயிரம் ரூபாதான் வந்தது. ஏன் கூட அனுப்பேலாதோ… அவளை ஸ்கூல்ல சேர்க்கிறதுக்கும் வேணுமல்லோ எனத் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்தாள் அந்தப் பொம்பிளைப் பிள்ளை. ஒரு கட்டத்தில் ‘மாமிக்கு என்னால குடுக்கேலாது. வேணுமன்டா நீங்கள் அவாவுக்கு தனியா அனுப்புங்கோ. என்னென்டாலும் செய்து துலையுங்கோ. இந்தக் காசு எனக்கு 15 நாளுக்கும் போதாது. இதுக்குள்ள அவாவும் கேக்குறாவோ என்ற கதையும் வந்தது.
‘லூசு கொஞ்சம் வெயிற் பண்ணுடா… இப்பத்தான் போம் நிரப்பிக் கொடுத்துட்டு இருக்கிறன். கொஞ்ச நேரம் செல்லும்’ யாழில் உள்ள பிரபல வங்கிக்கு காசு எடுக்கப் போனபோது ஒரு பொம்பிளை தனது கைத் தொலைபேசியில் இப்படி சொல்லிக் கொண்டு இருந்தாள்.
பார்த்தால் 35 வயது இருக்கும். நெற்றியில் பொட்டு இல்லை. ஒரு வேளை விதவையா இருக்கும் என்டு நினைத்துக் கொண்டு இருக்கும் போது தனது ‘பேர்ஸ்’ இல் இருந்து இன்னொரு கைத் தொலைபேசியை எடுத்தபோது அந்தப் பொம்பிளையின் நடவடிக்கையால் எனக்கு கொஞ்சம் ஈர்ப்பு ஏற்பட்டது. ‘பேர்ஸ்சில்’ .இருந்து எடுக்கும் போதே அந்த தொலைபேசியும் அனுங்கிக் கொண்டு இருந்தது.
ஒன்றை ஊகித்துக் கொண்டேன். தொலைபேசியில் இவளுடன் கதைப்பது இவளுடைய புருசனாகத்தான் இருக்கும். அப்போ அந்த லூசு யார்.? தலையைக் குழப்பிக் கொண்டு இன்று காசு வங்கியில் போடாவிட்டாலும் இவளுடன் கொஞ்சம் திரியத்தான் வேணும் என்று நினைத்துவிட்டு அவளுக்குப் பக்கதில் போய் நின்றேன். மெதுவாக எனது கைத்தொலைபேசியால் ஆசையாக அவளது முகத்தைப் பதிவு செய்தேன்.
அவளுடைய புருசனின் பெயருடன் இவளுடைய பெயரையும் வங்கியில் கூப்பிட்டார்கள். இவள் போகும் போது நானும் அருகில் போய் நின்றேன். 76ஃஃஃஃஃ என்ற இலக்கத்துடன் கூடிய அடையாள அட்டை. இவளுடைய வயது அறிந்தேன். பக்கத்தில் நான் போய் நின்ற போது என்னைப் பார்த்து விட்டு அங்கிள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ என்று அவள் சொல்ல எனக்கு வயிறு எரிந்தது. இவளுடைய புருசனின் வயதும் எனக்கு வராது. ஆனால் நான் அங்கிளாகி விட்டேனே என கோபத்துடன் அவளைப் பார்த்து விட்டு சற்று ஒதுங்கி நின்றேன்.
காசு எடுத்த சந்தோசத்தில் அந்தப் பொம்பிளை மீண்டும் தனது தொலைபேசிகளில் ஒன்றை எடுத்தது. அது சிமாட் போன் என்று சொல்லுற போன்களில் ஒன்று. டேய் எங்க நிக்கிறாய். கெதியாய் வாடா என தொலைபேசியில் தகவல் கொடுத்து விட்டு என்ர மருமகள் கர்ததிருந்தாள். (நான் அங்கிள் தானே)
நானும் சற்றுத் தொலைவில் வெளியே போய் நின்றேன். ஒரு பச்சை நிற ஆட்டோ சுழன்று கொண்டு வந்து அவளுக்கு அருகின் நின்றது. ஒரு 25 வயதுப் பெடியன் அவளை ஆட்டோவில் ஏற்றினான். ஏற்றும் போது அவனின் மண்டையில் தனது கைப் பையால் ஒரு அடி போட்டுவிட்டே ஏறினாள்.
அதனிடையில் அந்த இடத்தில் நின்ற ஒரு என்னைப் போல நடுத்தர வயதுக்காரன் இந்த இளைஞனை மறித்து ஏதோ சிரித்துக் கதைத்துவிட்டு அவனை அனுப்பினான்.
கதைத்த அந்த நடுத்தர வயதுக்காரரை அணுகி தம்பி ஆட்டோவில போறது அந்தப் பெடியனின் அக்காவோ என்று கேட்டேன். அவன் எதுக்குக் கேக்குறீங்கள் என என்னை சந்தேகமாகப் பார்த்தான். இல்லைத் தம்பி. அவள் அவனை அடித்ததைப் பார்த்தேன் அதுதான் என்று நான் இழுக்க….
அவன் ஒரு சின்ன வசனம் சொன்னான்.
அவன் ஓடுற ஆட்டோ அந்தப் பெண்ணின் கணவருடையது. அவர் சவுதிக்குப் போனப் பிறகு இவன்தான் வைச்சு ஓட்டுறான். நான் எனக்குள் நினைச்சுக் கொண்டு வந்தேன். இவன் சவுதியில இருக்கிற கணவரின் ஆட்டோவை மட்டும் ஓட்டவில்லை……………..

இவ்வாறு அவருடைய பதிவு அமைந்திருந்தது.உண்மையில் இப்படியான ஒரு சம்பவம் அல்ல பல சம்பவம் நம்முடைய சமுகத்தில் திரும்பும் பக்கம் எல்லாம்  நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது நாளும் பொழுதும் . பல ஆண்கள் நினைப்பது பணம் மட்டுமே வாழக்கை பணத்தை அனுப்பினால் பணத்தை உழைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று ஆனால் அவர்கள் உங்களுடைய உறவுகள் கிடைக்காத போது  அதையும் தாண்டி வேறு ஆண் உறவுகளை எதிர்பார்கிறார்கள். அதற்காக வேறு ஆண்களிடம் உறவை தொடர்கிறார்கள்.
அவர்கள் உடலியல் தேவைகளை சமுகத்திற்கு தெரியாமலும் தெரிந்தும் மேற்கொள்கின்றார்கள் அவர்கள் தன் கணவனை பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை தனது உல்லாச வாழக்கையை மட்டுமே சிந்திக்கின்றாள்.ஆனால் கணவன் வந்த பிறகு அவன் யாரோ இவள் யாரோ என்று  இருக்கிறனர் .பின்னர் மீண்டும் கணவன் வெளிநாடு போனால் திரும்பவும் முன்னர் தொடர்பு வைத்திருந்தவனுடன் மீண்டும் உல்லாசம்தான்
இப்படி சமுகத்தில் நடப்பதற்கு ஆண்களும் ஒரு காரணம் தன் மனைவி மாரின் உடலியல் தேவைகள நிறைவேற்றி குடுமபத்துடன் பிள்ளைகளுடன் வாழ வேண்டும்  ஆனால் அவ்வாறு வாழ பொருளாதார சிக்கல் என்ன செய்வது அவர்கள் வெளிநாட்டுக்கு போய் ஆகவேன்ண்டும் இரண்டுமே பிரட்சனைதான் 
அப்படி என்றால் என்ன வழி  ஆண்கள்தான் மனதை மாற்ற வேண்டும் என நினைக்கின்றேன். எப்படியோ அவள்  இருக்கட்டும் நான் வந்த பிறகு என்னுடனும் பிள்ளைகளுடனும் வாழ்ந்தால் சரி  என்று  மனதை மாற்றினால்தான் உண்டு. அப்படி இல்லை என்றால் என் கணவர் எனக்காக வெளிநாட்டில் கஷ்டப்படுகிறார் நான் அவருக்காக உண்மையாக இருக்க வேண்டும் என் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும்  என்று பெண்கள்  நினைத்தால்தான் உண்டு.ஆனால் அப்படி நினைப்பது ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருக்கும்

சிறப்பாக இருக்க வெளிநாடு போகும் ஆண்களே…!! பொருளாதாராத்தைப் பார்த்தால் உங்கள் தாரம் பொதுத்தாரமாகப் போய்விடும் கவனம்
ஆனால் அனைத்து பெண்களையும்  முற்று முழுதாக அவ்வாறு நினைப்பதும் தவறு..............................
Next
This is the most recent post.
Previous
This is the last post.

0 comments:

Post a Comment

 
Top